Saturday, December 4, 2010

கருவூர் நாட்டர் எம்மான சாலைஆண்டவர்களின் திருச்சன்னிதி



ஓர் மாணாக்கர் தத்துவத்தை உலகிற்குரைத்த
உத்தமர்தம் உறைவிடமிது
ஏழுலுகும் ஏகி வந்த ஏகன் என் ஆண்டவர்
அருள்பாலிக்கும் அருட்திருவூர்
எம்மான் தேவகோமான் உறைந்த உரையூர்ஒப்புவமையற்ற யோக்கியர் உலாவரும்
தெய்வத் திருப்பதியாம் மெய்நிற்கும் தவப்பதி
கருவூர் வாழும் எம் ஐயன் அருட்பதி
அதுவே மெய்குண்டமென்னும்
பூலோக சுவர்க்கபதி

மெய்வழிச் சபை கொடியேற்றத் திருவிழா



தோடுடைய செவியன்
தொண்டர் தொழு தலைவன்
பார்முழுதும் பட்டொளி வீசி
பயல்காட்டி அழைத்த பகலவன்
ஏகன் என் ஏந்தல் ஏத்தி வைத்த
...வெண்ணிலவு வெண்கொடி
கொற்றம் விளங்கவைத்த
எங்கள் குலக் கொடி
குடி அழைத்து குவலயோர்க்கு
கோடி இன்பம் தரவல்ல
கோமகனின் குடிப்பிரசாத
கொடியேற்றும் எங்கள் குலப்
பெரு நிகழ்வு